உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தோடா எம்ப்ராய்டரிக்குஅப்படி ஒரு சிறப்பு

தோடா எம்ப்ராய்டரிக்குஅப்படி ஒரு சிறப்பு

தோடா எம்ப்ராய்டரி என்பது, தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடா பழங்குடியினரின் தையல் கலை. தோடா இனப் பெண்களின் கைவண்ணத்தில் எம்ப்ராய்டரி, சிவப்பு மற்றும் கருப்பு வண்ண நுால் கொண்டு உருவாக்கப்படுகிறது.தோடர் இனத்தவர், எருமை மாடுகளை வணங்கும் வழக்கம் கொண்டிருப்பதால், இவ்வகை எம்ப்ராய்டரிகளில் எருமை மாடுகளை மையக்கருத்தாக கொண்ட எம்ப்ராய்டரி உருவாக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், சூரியன், சந்திரன், நட்சத்திரம் என பல்வேறு வடிவங்கள் இந்த எம்ப்ராய்டரிகளில் உருவாக்கப்படுகிறது.தோடர் இன பெண்கள் மற்றும் ஆண்கள், இவ்வகை எம்ப்ராய்டரி செய்யப்பட்ட உடைகளை விரும்பி உடுத்துவர். இதுபோல் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நெய்யப்படும் பல்வேறு வகையான எம்ப்ராய்டரி குறித்த அஞ்சல் தலை, 2019ம் ஆண்டு வெளியிடப்பட்டது.(நவ., 12, 13ல் சுகுணா திருமண மண்டபத்தில், அஞ்சல் தலை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம். இதையொட்டி, தினம் ஒரு தபால் தலையின் வரலாறை காண்போம்).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை