மேலும் செய்திகள்
விவேகானந்தா பள்ளியில் என்.எஸ்.எஸ்., அறிமுகம்
27-Jun-2025
சூலுார்; நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும் எனில், யாரும் போதைக்கு அடிமையாகாதீர்கள், என, அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.சூலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம், கோவை அக் ஷயம் டிரஸ்ட், சி.எஸ்.வி., பவுண்டேஷன் சார்பில் 'போதை இல்லா தமிழகம்' என்ற தலைப்பில், போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியை ஜெயசீலி தலைமை வகித்தார். மாவட்ட போதை தடுப்பு அமலாக்க பிரிவு துணை கண்காணிப்பாளர் செல்வ தங்கம் பேசியதாவது: ஒரு சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், ஊர் நன்றாக இருக்க வேண்டும். ஊர் நன்றாக இருக்க ஒவ்வொரு வீடும் நன்றாக இருக்க வேண்டும். வீடு நன்றாக இருக்க வீட்டில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். நாம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், எந்த ஒரு போதை மற்றும் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி விடக்கூடாது. கெட்ட பழக்கத்துக்கு அடிமையாக மாட்டேன் என்ற விஷயத்தில் அனைவரும் சுயநலத்தோடு இருக்க வேண்டும் இவ்வாறு, அவர் பேசினார். புகையிலை தடுப்பு பிரிவு அலுவலர் டாக்டர் சரண்யா தேவி பேசுகையில், புகையிலையால் தலை முதல் பாதம் வரை பல நோய்கள் வரும். எந்த வடிவிலும் புகையிலையை பயன்படுத்த கூடாது, என்றார். டிரஸ்ட் நிர்வாகி பாஸ்கரன், பாசில் ரகுமான், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கதிர்வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கேள்விகளுக்கு பதில் கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
27-Jun-2025