உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரியம் சாதிக்க லஞ்சம்... கொடுக்காதீர்! இளைஞர்கள் தடுக்கலாம்!

காரியம் சாதிக்க லஞ்சம்... கொடுக்காதீர்! இளைஞர்கள் தடுக்கலாம்!

கோவை: ''லஞ்சம் கொடுத்தால்தானே, அரசு ஊழியர்களும் அரசியல்வாதிகளும் வாங்குவார்கள்...முதலில் கொடுப்பதை நிறுத்த வேண்டும். இளைஞர்களும், மாணவர்களும் லஞ்சம், ஊழலுக்கு எதிராக போராட தயாராக வேண்டும்,'' என, முன்னாள் ஏ.டி.எஸ்.பி., வேலு பேசினார்.ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோவை கிளை சார்பில், 'தாய் நாட்டை காப்போம்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம், வேளாண் பல்கலை பட்டமளிப்பு விழா அரங்கில் நேற்று நடந்தது.இதில் லஞ்சம், ஊழல் தடுப்பு காண்காணிப்பு பிரிவு முன்னாள் ஏ.டி.எஸ்.பி., வேலு பேசியதாவது:ஊழல் எதிர்ப்பு இயக்கம் லஞ்சம், ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் தமிழகத்தில் லஞ்சமும், ஊழலும் குறையவில்லை. முதலில் லஞ்சம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க முடியும்.ஒவ்வொரு ஆண்டும் அக்., முதல் வாரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கும் போது அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து, 'லஞ்சம் கொடுக்க மாட்டோம்; லஞ்சம் வாங்க மாட்டோம்' என்று உறுதிமொழி ஏற்கின்றனர்.ஆனால் அதன்படி யாரும் நடப்பதில்லை. அதனால் இளைஞர்களும், மாணவர்களும் லஞ்சம் ஊழலுக்கு எதிராக போராட தயாராக வேண்டும். இளைய சமுதாயம் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ