உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாசிப்பு, மொழித்திறன் மேம்பட நாடகம் உதவும்

வாசிப்பு, மொழித்திறன் மேம்பட நாடகம் உதவும்

கோவை; பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மாணவர்கள், 'தப்பி பிழைத்த மான்' என்ற நாடகம் நடத்தினர். ஆசிரியர் தின விழாவை கொண்டாடும் வகையில், ஐந்தாம் வகுப்பு பயிலும் எட்டு மாணவர்கள், தங்கள் தமிழ் பாடப்பகுதியில் உள்ள துணை பாடத்தின், நீதி கதையை மையமாக வைத்து, இந்நாடகம் நடத்தினர். தலைமையாசிரியர் சகுந்தலா கூறுகையில், “நன்னெறி கதைகள் மூலம் மாணவர்களுக்கு கற்பித்தால், வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும்; மொழித்திறனும் மேம்படும். பாடப்பகுதியில் உள்ளவற்றை அடிப்படையாகக் கொண்டு கதை, நாடகம், கட்டுரை போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தினால், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பதுடன், பாடமும் எளிதில் மனதில் பதியும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ