உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அண்ணாமலையார் குளத்தில் துார்வாரும் பணி துவக்கம்

அண்ணாமலையார் குளத்தில் துார்வாரும் பணி துவக்கம்

அன்னுார்; பல ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணாமலையார் குளத்தில் துார்வாரும் பணி நேற்று துவங்கியது.பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி மற்றும் மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் இணைந்து அமைந்தது அண்ணாமலையார் குளம். 40 ஏக்கர் பரப்பளவு உள்ளது.இந்த குளத்திற்கு தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் இருந்து அதிக அளவில் மழைநீர் வருகிறது. இந்தக் குளம் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. எனினும் சோதனையோட்டம் துவங்கி ஒன்றரை ஆண்டுக்குப் பிறகே இந்த குளத்திற்கு அத்திக்கடவு நீர் வந்தது.இந்நிலையில் இந்த குளத்தை ஆழப்படுத்தி, கரைகளை ஒழுங்குப்படுத்த இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தனர்.இந்நிலையில், இக்குளத்தில் துார்வாரி, மரக்கன்றுகள் நட்டு, பூங்கா ஏற்படுத்தி, குளத்தை சீரமைக்க, கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பு திட்டமிட்டது.இதையடுத்து கிராப்ட்ஸ்மன் ஆட்டோமேஷன் என்னும் நிறுவனத்தின் நிதி உதவி உடன் இயற்கை வழிபாடு மற்றும் துார்வாரும் பணி நேற்று குளக்கரையில் நடந்தது.இதில் தன்னார்வலர்கள் பேசுகையில், 'குளத்தில் அதிக அளவில் நீர் தேங்கும் படியும், குளத்துக்கு மழை நீர் வரும் பாதையை சீரமைக்கவும், கரைகளை ஒழுங்குபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதனால் குளத்தில் அதிக அளவு நீர் தேங்கும். சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் துார்வாரும் பணிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். களப்பணியில் ஈடுபட விரும்புவோர் பங்கேற்கலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி