மேலும் செய்திகள்
சாதனை மாணவர்களுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கவுரவம்
16-Dec-2025
கோவை, என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அரங்கில், 'செலஸ்டியல் 2025' நிகழ்வு நடந்தது. ஆடை வடிவமைப்பு துறையின் சார்பில் 'தேவதைகள் மற்றும் சூனியக்காரிகள்' என்ற தலைப்பில்ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். தேவதைகள் மற்றும் சூனியக்காரிகள் போல பிரத்யேக ஆடைகளை அணிந்து அணிவகுத்து வந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். என்.ஜி.பி. கல்விக்குழும தலைவர் நல்லா பழனிசாமி, கல்லுாரி செயலாளர் தவமணி, என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை அறங்காவலர்கள் அருண், மதுரா, தலைமை செயலர் அலுவலர் புவனேஸ்வரன், கல்வித்துறை இயக்குனர் முத்துசாமி பங்கேற்றனர்.
16-Dec-2025