உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சொட்டு நீர் பராமரிப்பு முகாம் பொறியியல் துறை அழைப்பு

சொட்டு நீர் பராமரிப்பு முகாம் பொறியியல் துறை அழைப்பு

கோவை, : கோவை மாவட்டத்தில், நிலத்தடி நீர் அளவு குறைந்து வருவதால், குறைந்த நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்ய வசதியாக, விவசாயிகளுக்கு சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க, குறு, சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகள் 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.இந்நிலையில், கோவை மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில், சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன அமைப்புகளைப் பராமரிப்பது குறித்த செயல்விளக்க பயிற்சி, மதுக்கரையில் வரும் 20ம் தேதி நடக்கிறது.மதுக்கரை, நாச்சிபாளையத்தில் விவசாயி தங்கவேலின் தோட்டத்தில், காலை 11:00 மணிக்கு செயல்விளக்கம் மற்றும் பயிற்சி முகாம் நடக்கிறது. இதில் பங்கேற்று பயனடைய, விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை