லஞ்ச் நேரத்தில் ஓட்டு
கோவை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின், கோவை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல், நேற்று நடந்தது.கோவையில் பணிபுரியும் பெரும்பாலான வருவாய்த்துறை பணியாளர்கள், கோவை வடக்கு தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்ட, பெரிய நாயக்கன்பாளையத்தில் நடந்த 'உங்களைத்தேடி உங்கள் ஊரில்' முகாமில் பங்கேற்க சென்றனர்.அதனால் அங்குள்ள நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், வருவாய்த்துறை பணியாளர்கள் ஓட்டுக்களை செலுத்துவதற்கு வசதியாக, ஓட்டுப்பெட்டி, ஓட்டுச்சீட்டுக்களை கொண்டு வந்திருந்தனர். உணவு இடைவேளை நேரத்தில் வந்த பணியாளர்கள், ஓட்டுக்களை செலுத்தினர்.