உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரில் துாங்கிய டிரைவர் மரணம்

காரில் துாங்கிய டிரைவர் மரணம்

கோவில்பாளையம்: விளாங்குறிச்சியில் 80 அடி சாலையில் மதுபான பார் முன்பு, ஒரு கார் இரண்டு நாட்களாக நின்று கொண்டிருந்தது. இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கோவில்பாளையம் போலீசார், காரை திறந்து பார்த்ததில், காரில் விசுவாசபுரத்தை சேர்ந்த சாமிநாதன் மகன் டாக்ஸி டிரைவர் சிவக்குமார், 46. என்பவர் காருக்குள் சீட்டில் அமர்ந்தபடி இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ