பெண்ணை தாக்கிய டிரைவருக்கு சிறை
கோவை:ராமநாதபுரம் அருகே புலியகுளம் கிருஷ்ணன் கோவில் வீதியை சேர்ந்தவர் திவ்ய பிரியா, 31. தனியார் நிறுவன ஊழியர். இவர்களது வீட்டுக்கு எதிரில் வசிப்பவர் ஆட்டோ டிரைவர் கலைமுத்து, 50. திவ்யப்பிரியா வீட்டுக்கு முன்புள்ள இடத்தை, சுத்தம் செய்ய தண்ணீர் தெளித்தார். எதிர் வீட்டின் முன் நிறுத்தியிருந்த கலைமுத்து பைக் மீது தண்ணீர் சிந்தியது. கலைமுத்து தகராறு செய்துள்ளார். கழிவுநீரை திவ்யபிரியா வீட்டு வாசலில் ஊற்றியபோது, அவரது தாய் மீது பட்டது. திவ்யபிரியா கேள்வி எழுப்பியதால், ஆத்திரமடைந்த கலைமுத்து, திவ்யபிரியா மற்றும் அவரது தாயாரை தாக்கினார். ராமநாதபுரம் போலீசார் கலைமுத்துவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.