உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டிரைவருக்கு கத்திக்குத்து

டிரைவருக்கு கத்திக்குத்து

கோவை; வடவள்ளி டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் ஜெகன், 47; ஆக்டிங் டிரைவர். இவரது பக்கத்து வீட்டுக்காரர் கார்த்திக், 38. இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன் ஜெகன், தனது வீட்டின் அருகில் நின்றிருந்தார். அப்போது கார்த்திக் அவருடன் தகராறில் ஈடுபட்டார்.தகராறு முற்றிய நிலையில், ஆத்திரத்தில் ஜெகன் வயிற்றில், கார்த்திக் கத்தியால் குத்தினார். பலத்த காயமடைந்த ஜெகனின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த அவரது மகன், அவரை காப்பாற்றி மருத்துவமனையில், அனுமதித்தார்.பின், வடவள்ளி போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து, கார்த்திக்கை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை