உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நடுரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்

நடுரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்

வால்பாறை,; வால்பாறை அருகே, டீத்துாள் ஏற்றி வந்த லாரி பிரேக் பிடிக்காமல், நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.வால்பாறையில் தேயிலை தொழில் மிக முக்கிய தொழிலாளாக உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் தேயிலைத்துாள், கோவை, குன்னுார், கொச்சி போன்ற ஏல மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.இந்நிலையில் தனியார் எஸ்டேட் தொழிற்சாலையிலிருந்து, 10 டன் தேயிலை துாள் ஏற்றி வந்த லாரி, பிரேக் பிடிக்காததால் ஸ்டேன்மோர் ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் விக்னேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். வால்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ