| ADDED : டிச 27, 2025 05:07 AM
கோவை: ட்ரோன் பயன்பாட்டுக்கு உகந்த புதிய நானோ உர கண்டுபிடிப்புக்கான காப்புரிமை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு வழங்கப்பட்டுள்ளது. பல்கலையின், வேளாண் நானோ தொழில்நுட்ப மைய விஞ்ஞானிகள் சுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் வழிகாட்டலின் கீழ், பிரதீப் மேற்கொண்ட ஆய்வில் இத்தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள திரவ நைட்ரஜன் உரங்கள் ஊட்டச்சத்து குறைவாக இருப்பதோடு, ட்ரோன் வாயிலாக தெளிக்கும் போது, சிதறி வீணாகின்றன. இக்குறைகளைக் களைய, திரவ உரத்தின் நைட்ரஜன் உள்ளடக்கத்தை அதிகரிக்க புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். இம்முறையில், ஊட்டச்சத்துசில்லிகா நானோ கணிகைகளால் பொதியப்பட்டு, பாலிஎத்திலீன் கிளைகோல் வாயிலாக பிணைக்கப்படுகிறது. இதனால், நைட்ரஜன் இருப்பு சுமார் 32 முதல் 36 சதவீதம் ஆக அதிகரிக்கிறது. மேலும், அதிக அடர்த்தி , நிலைத்தன்மை காரணமாக, ஊட்டச்சத்து வழங்கல் துல்லியமாகவும், தெளிப்புச் சிதறல் குறைவாகவும் இருக்கும். இத்தொழில்நுட்பத்துக்கான காப்புரிமையை இந்திய அரசின் காப்புரிமை அலுவலகம், வழங்கியுள்ளது.