உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  போதைப்பொருள் ஒழிப்பு பள்ளிகளுக்கு கையேடு

 போதைப்பொருள் ஒழிப்பு பள்ளிகளுக்கு கையேடு

கோவை: அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே, போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வலர் குழுக்களுக்கான சிறப்பு வழிகாட்டி கையேடு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள, 690 பள்ளிகளுக்கு தலா ஒரு கையேடு வீதம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் செயல்படும் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் வாயிலாக, இந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள போதைப் பொருள்கள் குறித்த அடிப்படை அறிவு, அவற்றின் பயன்பாட்டினால் உடல் மற்றும் சமூகத்தில் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து, மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க மாவட்ட பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை