மேலும் செய்திகள்
சர்வதேச அளவிலான செஸ் போட்டி
04-Aug-2025
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார், பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி நிறுவனம் மற்றும் பாபிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை, பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., பொன்னுசாமி துவக்கி வைத்தார். ஊர்வலம் பெரி யநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன், எல்.எம்.டபிள்யூ., பிரிவு, மேட்டுப்பாளையம் ரோடு வழியாக மீண்டும் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தை அடைந்தது. ஊர்வலத்தில் போதை பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மாணவ, மாணவியர் கைகளில் ஏந்தி சென்றனர். ஊர்வலத்தில் பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர்.
04-Aug-2025