உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இ - பைலிங் வழக்கு தாக்கல் : டிச.2 முதல் கட்டாய அமல்

இ - பைலிங் வழக்கு தாக்கல் : டிச.2 முதல் கட்டாய அமல்

கோவை: நீதிமன்றங்களில், இ- பைலிங் முறையில் வழக்கு தாக்கல் செய்யப்படுவது, டிச. 2 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் வழக்குகள் நேரடியாக தாக்கல் செய்யப்படும் நடைமுறை மாற்றப்பட்டு, இ-கோர்ட் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான வழக்குகளையும், மின்னனு (இ-பைலிங்) முறையில் தாக்கல் செய்யும் நடைமுறை, கொண்டு வரப்பட்டது. 2023 செப்., முதல் புதிய நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. சர்வர் பிரச்னை, தொழில்நுட்ப கோளாறு, போதிய பயிற்சியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், புதிய நடைமுறையை நிறுத்தி வைக்க கோரி, வக்கீல் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தியதால், இ-பைலிங் முறை இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், அக்., 8 முதல், இ-பைலிங் வழக்கு தாக்கல் நடைமுறை கட்டாயம் என்று சென்னை ஐகோர்ட் அறிவித்தது. இது தொடர்பாக ஐகோர்ட் இணையதளத்திலும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டுக்குழுவினர், கேட்டு கொண்டதன் பேரில், இ-பைலிங் நடைமுறையை, டிச., 1 வரை தற்காலிகமாக நிறுத்திவைக்க சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதனால் டிச., 2 முதல் இ- பைலிங் வழக்கு தாக்கல் நடைமுறை, கட்டாயம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை