உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருப்பரங்குன்றம் சம்பவம் எதிரொலி: ஹிந்து அமைப்புகள் பிப்., 4ல் ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் சம்பவம் எதிரொலி: ஹிந்து அமைப்புகள் பிப்., 4ல் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி; ''திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை களங்கப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பிப்., 4ல் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என, ஹிந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.கோவை மாவட்டம், ஆனைமலை வேட்டைக்காரன்புதுாரில், ஹிந்து முன்னணியின் கோவை கோட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், கலந்து கொண்ட மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:திருப்பரங்குன்றம் முருகனின் புனிதத்தலத்தை, களங்கப்படுத்தும் நபர்களை தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.திருப்பரங்குன்றம் மலையின் மீது ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்தன்று, தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. இருப்பினும், தமிழக அரசு, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால், ஹிந்துக்களுக்கு சொந்தமான வழிபாட்டுத்தலத்தை பிற மதத்தினர் உரிமை கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.எஸ்.பி.டி.ஐ., அமைப்பைச் சேர்ந்தவர்கள், திருப் பரங்குன்றம் மலை மீது சென்று, ஆடு, கோழி வெட்டுவோம் என, தெரிவித்துள்ளனர். அதனை, ஹிந்து முன்னணி போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்தியுள்ளது.அந்த அமைப்புக்கு ஆதரவாக ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி, எம்.எல்.ஏ., ஆகியோர், மலைமீது சென்று பிரியாணி உட்கொண்டுள்ளனர். ஹிந்துக்கள் ஓட்டு பெற்று தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், ஒருமதத்தை சார்ந்து செயல்படுகின்றனர். அவர்களின் மீது நடவடிக்கைக் கோரி, ஹிந்து அமைப்புகள் ஒன்றிணைந்து, பிப்., 4ல், அப்பகுதியில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக அரசு இருத்தல் வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

manjagrup
ஜன 28, 2025 09:38

அசைவம் உங்களுக்கு பிரச்சனை இல்லை இதை தடுத்து சைவ நெறியை காப்பது தான் உங்களுக்கு மத பிரச்சனை


Palanisamy T
ஜன 27, 2025 18:27

தமிழகத்தில் மதச் சார்பற்ற கொள்கை யென்ற சாக்குப்போக்கில் பிறர் நம் சைவ வழிப்பாட்டை ஹிந்து மதத்தை அசிங்கப் படுத்துவதை இனிமேல் ஏற்றுக் கொள்ளவோ தாங்கி கொள்ளவோ முடியாது . இந்தியாவின பக்கத்து ஊர்களுக்குச் சென்று நம் மதச் சார்பற்றக் கொள்கையை பறைச் சாற்ற முடியுமா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 27, 2025 14:43

ஒருத்தர் மாற்றி ஒருத்தர் மூலம் ஏதாவது பேசி, தமிழ் நாட்டில் ஒரு மதக்கலவரம் உருவாக்க ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக முயன்று கொண்டே இருக்கிறது. இந்த வாரம் காடேஸ்வரா வின் முறை. அடுத்த வாரம் அ. சம்பத் னு நினைக்கிறேன். அதுக்கு அடுத்த வாரம் அண்ணாமலை தமிழிசை யா? ஆனால் எந்த கலவரமும் உருவாக்க பாஜக வினால் தமிழ் நாட்டில் முடியவில்லை. ஒரு நாளும் முடியாது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 11:19

முதலில் கோவிலுக்குச் செல்வதால் மட்டும் நன்மை ஏற்பட்டுவிடும் என்று நம்பும் ஹிந்துக்களுக்கு மதப்பற்றினை உருவாக்குங்கள் ...... மற்றவை தானாக சரியாகும் ....


Palanisamy T
ஜன 27, 2025 18:08

மதப் பற்றினைவிட நம் சைவ சமயத்தின் மேன்மையை உயர்வை கொள்கையை கோட்பாட்டை மக்களிடம் எடுத்துச் சொல்லவேண்டும். சைவசமய வழிப்பாடு என்னவென்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். கந்தக் கடவுள் வழிப்பாடு மற்றும் சிவ வழிப்பாடு எல்லா வழிப்பாடுகளெல்லாம் சைவ வழிப்பாட்டில் அடங்கும். என்றும் காலத்தால் அழியாதது. அதை நாம் மறந்துவிட்டோம் .


புதிய வீடியோ