மேலும் செய்திகள்
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
29-Sep-2026
கோவை: மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த பி.சி., எம்.பி.சி., டி.என்.சி., மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., மத்திய பல்கலையில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி , தேர்வு உள்ளிட்ட கட்டணங்கள் அல்லது ஆண்டு உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பத்தை www.bcw.tn.gov.inஇணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். புதுப்பித்தல் விண்ணப்பங்களை அக். 31க்குள்ளும், புதிய விண்ணப்பங்களை நவ., 30க்குள்ளும் அனுப்ப வேண்டும். பிற அரசு கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியில்லை.
29-Sep-2026