புத்தங்களை தாண்டிய கல்விமுறை: பி.வி.எம்., குளோபல் பள்ளியில் சேர்க்கை ஆரம்பம்
புத்தகங்களை தாண்டி படித்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்ற கற்றல், கற்பித்தல் கொள்கையின் படி, கடந்த, 15 ஆண்டுகளாக கோவையில் செயல்பட்டு வருகிறது. பிவிஎம் குளோபல் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப்பள்ளி. பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொது தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியை தக்கவைத்துள்ளது. இங்கு, மழலை முதல் பிளஸ்2 வரை என்.ஐ.ஓ.எஸ்., கல்வி முறையுடன் இணைந்து மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறது. பாடபுத்தகங்களை தாண்டி, படைப்பாற்றல், தகவல் பகிர்வு, தொடர்பாற்றல் திறன், சிந்தனை திறன், தலைமைப்பண்பு என பல்வேறு பிரிவுகளிலும் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தொழில்நுட்பம், ஆராய்ச்சி திறன், மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் சார்ந்து சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. பாடங்கள் மட்டுமின்றி, விளையாட்டு, நடனம், இசை, பல்வேறு மொழிப்புலமை, ஆகியவற்றுக்கு தனிகவனம் செலுத்தப்படுகிறது. விஜயதசமியை முன்னிட்டு மழலையர் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உடன்பிறப்புகளுக்கு கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு சுகாதாரம், துாய்மை, மகிழ்ச்சியான கற்றல் சூழலை அளிக்கும் வகையில் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.