மேலும் செய்திகள்
கல்விக்கடன்; ரூ.90 கோடி இலக்கு
30-Aug-2025
கோவை; உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்த, வங்கி கடன் பெறும் முகாம், கோவை பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லுாரி முதல்வர் பிரகாசம் வரவேற்றார். கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார். எம்.பி., கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்தார். வங்கியின் பங்கு குறித்து, கனரா வங்கியின் துணை மேலாளர் காஞ்சனா ஸ்ரீ விளக்கினார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் சார்பில், அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கடன் பெறுவதற்கான வழிமுறைகளை தெரிவித்து, மாணவர்களிடம் கல்விக்கடன் விண்ணப்பம் பெற்றனர். முகாமில், 42 மாணவ, மாணவியருக்கு, 4.44 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ் வழங்கும் வகையில், இ---சேவை மையம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
30-Aug-2025