மேலும் செய்திகள்
காரமடையில் திருமங்கையாழ்வார் நட்சத்திர வைபவம்
14-Dec-2024
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், மார்கழி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் நேற்று நடந்தது. அதிகாலையில் கோவில் நடை திறந்து, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கால சந்தி பூஜை, ஆராதனம், புண்யாவசனம், கலச ஆவாஹனம் ஆகியவையும், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்பு பட்டு உடுத்தி அரங்கநாத பெருமாள், வெள்ளி சப்பரத்தில் மேளதாளம் முழங்க, கோவில் வளாகத்தின் உள்ளே வலம் வந்தார். பின்பு ஆஸ்தானம் எழுந்தருளிய அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, சிம்மாசனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வைபவ ஏற்பாட்டினை அறங்காவலர்கள், கோவில் செயல் அலுவலர் சந்திரமதி ஆகியோர் செய்து இருந்தனர்.
14-Dec-2024