மேலும் செய்திகள்
செங்கை மாவட்ட கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விமரிசை
11-Jan-2025
பாலக்காடு : திருவம்பாடி கிருஷ்ணர் கோவிலில் ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருவம்பாடி கிருஷ்ணர் கோவிலில், மார்கழி மாதம் ஏகாதசி உற்சவம் கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் நேற்று நடை திறந்ததும் துவங்கியது.அதிகாலை 3:45 மணிக்கு நிர்மல்ய தரிசனம், 4:00 மணிக்கு மூலவருக்கு வாகசார்த்து மற்றும் அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து, 5:00 மணிக்கு அஷ்டபதி, 6:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம ஜெபம், 7:00 மணிக்கு நாராயணிய பாராயணம் நடைபெற்றது.அதன்பின், காலை, 8:30 மணிக்கு சேராநெல்லூர் சங்கரன்குட்டி மாராரின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற 'பஞ்சாரிமேளம்' என்ற செண்டை மேளம் முழங்க ஆடை ஆபரணங்கள் மற்றும் முத்துமணி குடைகள் சூடிய ஐந்து யானைகளின் அணிவகுப்பில் 'உஷசீவேலி' நிகழ்ச்சி நடந்தது. இதில் திருவம்பாடி சந்திரசேகரன் என்ற யானை மீது உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பகல், 11:30 மணிக்கு நவகம், பஞ்சகவ்யம், ஸ்ரீபூதபலி, கேரளா பாரம்பரிய கலையான 'ஓட்டன்துள்ளல்' நடனம் ஆகியவை நடந்தது. அதன்பின், பஞ்சவாத்தியம் முழங்க ஐந்து யானைகளின் அணிவகுப்பில் 'காழ்ச்சீவேலி' நடந்தது. இரவு அத்தாழபூஜை மற்றும் சீவேலி நடந்தது. பக்தர்கள் ஏகாதசி சுற்று விளக்கேற்றி வழிபட்டனர்.
11-Jan-2025