உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதுக்கரை அருகே கார் மோதி முதியவர் பலி

மதுக்கரை அருகே கார் மோதி முதியவர் பலி

போத்தனூர்: மதுக்கரையை அடுத்த வழுக்குப்பாறை, முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் பெருமாள், 70. அதிகாலை மதுக்கரை -- நீலம்பூர் பைபாஸ் சாலை அருகேயுள்ள, பேக்கரிக்கு டீ குடிக்க சென்றார். பை-பாஸ் சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த கார் (இன்னோவா) மோதி படுகாயமடைந்தார். அவ்வழியே சென்றோர் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். பெருமாளின் மகள் சுமதி புகாரில், மதுக்கரை போலீசார் காரை ஓட்டி வந்த, கேரள மாநிலம், கோழிக்கோடு, திருவள்ளூரை சேர்ந்த கோகுல் என்பவர் மீது, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை