அரசு பஸ் மோதி முதியவர் உயிரிழப்பு
தொண்டாமுத்தூர்; சிறுவாணி மெயின்ரோட்டில், பேத்தியை பள்ளியில் விட்டுவிட்டு, பைக்கில் வந்த முதியவர் மீது, அரசு பஸ் மோதியதில், முதியவர் உயிரிழந்தார்.சென்னனூரை சேர்ந்தவர் கருப்புசாமி,83; விவசாயி. இவர் தன் பேத்தியை, இருசக்கர வாகனத்தில், சிறுவாணி ரோடு, ஸ்பிக் அருகே உள்ள தனியார் பள்ளியில் விட்டுவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தார். சிறுவாணி ரோட்டிற்கு வரும்போது, பூண்டியில் இருந்து, கோவை நோக்கி அதிவேகமாக வந்த அரசு பஸ் மோதியதில், கருப்புசாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் தப்பி ஓடிவிட்டனர். ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.