உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தவறி விழுந்து முதியவர் பலி

தவறி விழுந்து முதியவர் பலி

கோவை; கோவை வடவள்ளி ஐ.ஓ.பி., காலனியை சேர்ந்தவர் அனந்தகிருஷ்ணன், 67. கடந்த, 15ம் தேதி வீட்டின் ஜன்னல் கண்ணாடியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ