உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் மோதி முதியவர் பலி; போலீஸ் விசாரணை

பஸ் மோதி முதியவர் பலி; போலீஸ் விசாரணை

கோவை; தனியார் பஸ் மோதி முதியவர் பலியானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கோவை வடமதுரை தொப்பம்பட்டியை சேர்ந்தவர் ரவிசந்திரன், 62. நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் ரோட்டில் தொப்பம்பட்டி பிரிவு அருகே தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ் ஒன்று, பைக்கின் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட ரவிச்சந்திரன், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பஸ் டிரைவர் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், 27 என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை