பஸ் மோதி முதியவர் பலி
கோவை: ஊட்டி, எமரால்டு பகுதியை சேர்ந்தவர் சிவன்.74; பாலக்காட்டிலுள்ள மகன் விசி வீட்டிற்கு செல்வதற்காக, உக்கடம் பஸ் நிலையம் வந்தார். பஸ்சுக்காக நின்றுகொண்டிருந்த போது, வேகமாக வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனியார் பஸ் சிவன் மீது மோதியதில் சம்பவ இடத்தில்இறந்தார். கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் விசாரிக்கின்றனர்.