நாய்கள் கடித்து முதியவர் படுகாயம்
போத்தனுார்; போத்தனுார், மேட்டூர் நாச்சிமுத்து கவுண்டர் லே--அவுட்டை சேர்ந்தவர் ஸ்ரீ குமார். 65. கடந்த 21ல் இவர் சாலையில் நடந்து சென்றார். நடராஜ் என்பவரின் கடை அருகே சென்றபோது, நாய்கள் கூட்டம் இவரை சுற்றி வளைத்து, வலது கால் பாதத்தை கடித்து குதறின. அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், நாய்களிடம் இருந்து முதியவரை மீட்டு, அவரது வீட்டில் சேர்த்தார். பின், மருத்துவமனையில், வெறிநாய்க்கடி தடுப்பூசியுடன், கட்டு போடப்பட்டது. இந்நாய்க்கூட்டம் இதுபோல், மேலும் இருவரை கடித்துள்ளன. இப்பகுதியில், அரசு பள்ளி செயல்படுகிறது. நூற்றுக்கணக்கான குழந்தைகள் இவ்வழியே செல்வர். அவர்களை நாய் கூட்டம் பதம் பார்க்கும் முன், பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.