ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கோவில்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற மூதாட்டி, ரயிலில் அடிபட்டு இறந்தார்.கிணத்துக்கடவு, எஸ்.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மாராத்தாள், 80. இவருக்கு, கடந்த 15 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. கிணத்துக்கடவில் உள்ள மகன் பழனிச்சாமி வீட்டில் இருந்தார். இவரது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு எஸ்.மேட்டுப்பாளையம் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.நேற்று திடீரென, எஸ்.மேட்டுப்பாளையம் அருகே உள்ள ரயில்வே கேட்டில் இறங்கி, தண்டவாளத்தில் நடந்து சென்ற போது, ரயில் மோதியதில் இறந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.