மேலும் செய்திகள்
கார் விபத்து ஒருவர் பலி
10-Jan-2025
கார் மீது சரக்கு வாகனம் மோதல்: 3 பேர் படுகாயம்
29-Dec-2024
Boxing day டெஸ்ட் Match-லா நடந்த Boxing
26-Dec-2024
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, சரக்கு வாகனம் மோதி மூதாட்டி இறந்தது குறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சி அருகே, ஒக்கிலிபாளையத்தை சேர்ந்தவர் குப்பாத்தாள், 62. இவர், கணவருடன் வசித்து வந்தார். நேற்று இவர், குள்ளக்காபாளையத்தில் உள்ள மகள் வீட்டுக்கு நடந்து சென்றார்.பொள்ளாச்சி - கோவை ரோட்டில் நடந்து சென்று ரோட்டை கடக்க முயற்சித்தார். அப்போது, கோவையில் இருந்து அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்த சரக்கு வாகனம், மூதாட்டி மீது மோதியது. விபத்தில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி இறந்தார்.இது குறித்து, தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலம் சங்கிரியை சேர்ந்த டிரைவர் மவுலீஸ்வரன்,24, என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.
10-Jan-2025
29-Dec-2024
26-Dec-2024