உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிழையில்லாமல் வாக்காளர் பட்டியல் தயாரிக்க தேர்தல் பிரிவு புதிய திட்டம்

பிழையில்லாமல் வாக்காளர் பட்டியல் தயாரிக்க தேர்தல் பிரிவு புதிய திட்டம்

கோவை; வாக்காளர் பட்டியலில், மேற்கொள்ளும் சுருக்கமுறை திருத்தப்பணிகளில் தவறுகள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக, புதிய தொழில் நுட்பம் பயன்படுத்த, தேர்தல் பிரிவு திட்டமிட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், வரைவு வாக்காளர் இறுதி பட்டியலை கலெக்டர் கிராந்திகுமார், சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.கடந்த ஆண்டு மொத்த வாக்காளர் எண்ணிக்கை 31,49,239 ஆக இருந்தது. தற்போது, 31,85,594 ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 36,355 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். புதியதாக வெளியிட்ட வாக்காளர் பட்டியலில், ஏராளமான தவறுகள் நிறைந்துள்ளன. அவற்றை களைய புதியதாக மென்பொருளை இணைக்கும் முயற்சிகளை, மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இது குறித்து, மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: பெயர் சேர்க்க கொடுத்த விண்ணப்பங்களின் மீது கள ஆய்வு மேற்கொண்ட பணியாளர்கள் சரியாக பெயர்களை பதிவு செய்யவில்லை. அதனால் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கணவன், மனைவி பெயர் மாறியுள்ளது. அதனால் இந்த விபரங்களை வைத்து ஓட்டு செலுத்த முடியாது. இவற்றை முழுமையாக சரிசெய்ய, ஆதார் கார்டுக்கான மென்பொருள் மற்றும் வாக்காளர் பட்டியலுக்கான மென்பொருள் இரண்டையும் சரிபார்த்து பெயர் சேர்த்தல், திருத்துதல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். கள ஆய்வின்போது, ஜி.பி.எஸ்.கேமரா வாயிலாக, வாக்காளர்களை போட்டோ எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் போட்டோக்களை இணைக்கும் போது, ஜி.பி.ஆர்.எஸ்.,கேமரா வாயிலாக போட்டோ எடுத்து இணைக்கவும் அறிவுறுத்தப்படும். அப்போது இந்த தவறுகள் தவிர்க்கப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை