மேலும் செய்திகள்
ரவுடிகளுக்கு நெருக்கடி தரும் போலீஸ்
19-Feb-2026
கோவை: புறநகர் பகுதிகளில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 32 ரவுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை புறநகர் பகுதிகளில் தேர்தல் செயல்பாடுகளில் எவ்வித சிக்கல்களும் ஏற்படாத வகையில், போலீசாரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, இதற்கு முன் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், குற்றவாளிகள் பதிவுகளில் உள்ளவர்கள் தற்போது என்ன செய்கின்றனர் என்பதை, கடந்த சில நாட்களாக போலீசார் கண்காணித்தனர். சிறப்பு வாகன சோதனை, இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில், தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 32 பேர், எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டனர். மேலும் சில குற்றவாளிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
19-Feb-2026