மேலும் செய்திகள்
இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு
01-Feb-2026
வால்பாறை: தகுதியின் அடிப்படையில், ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி வழங்க வேண்டும் என, ஜக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறுவதையடுத்து, தேர்தல் பணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. தேர்தல் பணிக்காக அலுவலர்களை நியமிக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது. தேர்தல் பணியில் தகுதியின் அடிப்படையில், ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஜக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், 'வால்பாறை சட்டசபை தேர்தல் பணியில், 250 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலின் போது, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அவரவர் தரவரிசை மற்றும் ஊதிய அடிப்படையில் தேர்தல் பணியிடம் ஒதுக்க வேண்டும,' என்றனர்.
01-Feb-2026