உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸ் ரோந்து செல்லஎலக்ட்ரிக் கார்

போலீஸ் ரோந்து செல்லஎலக்ட்ரிக் கார்

கோவை: மாநகர போலீசார் ரோந்து செல்ல புதிதாக நான்கு எலக்ட்ரிக் கார்கள் வழங்கப்பட்டன. கோவை மாநகர பகுதிகளில் நடக்கும் குற்றச்சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் போலீசார் ரோந்து செல்ல கார்கள் வழங்கப்பட்டுள்ளன. கோவை மாநகர போலீஸ் சார்பில் மாசு கட்டுப்படுத்தும் வகையில் 'கார்பன் சமநிலை' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், போலீசார் ரோந்து செல்ல பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் போலீசாருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தற்போது சுமார், ரூ. 60 லட்சம் மதிப்பிலான நான்கு எலக்ட்ரிக் கார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், இரண்டு கார்கள் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த மேற்கு மற்றும் கிழக்கு போக்குவரத்து போலீசாருக்கும், இரண்டு வாகனங்கள் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ரோந்து பணிக்கும் பயன்படுத்தவும் வழங்கப்பட்டுள்ளன. நான்கு கார்களும், ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரியின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் மாநகர போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளன. கார்களை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரி நிர்வாக இயக்குனர்கள் பவுல் மற்றும் ஜான் ஆகியோர் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ