உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுமுகையில் மின்கம்பம் மாற்றி அமைக்கப்பட்டது

சிறுமுகையில் மின்கம்பம் மாற்றி அமைக்கப்பட்டது

மேட்டுப்பாளையம்: சிறுமுகை சாஸ்திரி வீதியில் மின் கம்பி, மிகவும் தாழ்வாக தொங்கிக்கொண்டு இருப்பது குறித்து தினமலரில் செய்தி வெளியானது. உடனடியாக மின்வாரிய அதிகாரிகள், புதிதாக மின்கம்பம் நட்டு கம்பிகளை உயர்த்தி கட்டினர். சிறுமுகை பேரூராட்சி மூன்றாவது வார்டு, பாரதி நகரில் சாஸ்திரி வீதி உள்ளது. இந்த வீதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீதி வழியாக வீடுகளுக்கு வழங்கப்படும் மின் கம்பிகள், உயர் அழுத்த மின் கம்பிகள் என, இரண்டு தனித்தனி மின் கம்பங்களில் செல்கின்றன. இதில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும், மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தன. இதனால் மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என, தினமலரில் போட்டோவுடன் செய்தி வெளியானது. செய்தியின் எதிரொலியால், சிறுமுகை மின்வாரிய அதிகாரிகள், உடனடியாக சாஸ்திரி வீதியில் புதிதாக மின் கம்பத்தை நட்டனர். பின்பு தொங்கிக் கொண்டிருந்த மின்சார கம்பிகளை, உயர்த்தி கட்டினர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை