மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
கோவை; வீட்டில் யு.பி.எஸ்., பழுது நீக்கும் போது, மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலியானார்.கோவை வீரியம்பாளையம் படேல் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார், 38; எலக்ட்ரீஷியன். இவர் நேற்று முன்தினம், வீட்டில் யு.பி.எஸ்., யூனிட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wfsbhr3i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதைப்பார்த்த அவரது மனைவி சத்தம் போட்டார். அருகிலிருந்தவர்கள் வந்து வினோத்குமாரை மீட்டனர். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பீளமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.