உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்சாதனங்களை கவனமாக கையாள சொல்லுது மின்வாரியம்

மின்சாதனங்களை கவனமாக கையாள சொல்லுது மின்வாரியம்

கோவை ; மழைகாலங்களில், மின்சாதனங்களை கவனமுடன் பயன்படுத்த வேண்டும் என, மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:மழைகாலங்களில், இடி, மின்னலின் போது, மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் ஆகிய பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். மின்பாதைக்கு அருகில் உள்ள மரங்கள், கிளைகள், வெட்டும் போது, அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரித்து, மின்சாரம் தடை செய்யப்பட்ட பின்னரே வெட்ட வேண்டும்.மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், இழுவை கம்பிகள், அருகே செல்லக்கூடாது. வீட்டு மின் சாதனங்களில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால், உடனே உலர்ந்த ரப்பர் காலணி அணிந்து மெயின் சுவிட்சை அணைத்த பின், மின்வாரியத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும். தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பது, நடப்பதை தவிர்க்கவும். மின்கம்ப இழுவை கம்பியில், மின்கம்பத்தில், கயிறு கட்டி துணி உலர்த்துதல், வளர்ப்பு பிராணிகளை கட்டி வைத்தல் கூடாது.மின்கம்பி அறுந்து கிடந்தால், கிடப்பதை கண்டால், அருகில் செல்லாமல், மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்சாரத்தால் ஏற்பட்ட தீயை தண்ணீர் கொண்டு, அணைக்க முயற்சிக்க வேண்டாம். எச்சரிக்கையோடு செயல்பட்டு விபத்தினை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, மின்வாரியம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ