உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் வாரிய அலுவலகம் இடமாற்றம்

மின் வாரிய அலுவலகம் இடமாற்றம்

கோவை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ராம்நகர் பிரிவு அலுவலகம், நாளை (மார்ச் 17ம் தேதி) முதல் டாடாபாத்தில் செயல்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.சத்தியமூர்த்தி ரோட்டில் செயல்பட்டு வந்த மாநகர், மையக் கோட்டம், ராம்நகர் பிரிவு உதவி செயற்பொறியாளர் மின் வாரிய அலுவலகம், நிர்வாக காரணங்களால், டாடாபாத் அருகில் உள்ள மின்னகம் கட்டடத்தில் நாளை முதல் (மார்ச் 17) செயல்படும்.ராம்நகர் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர், தங்கள் சேவைகளுக்கு இந்த அலுவலகத்தை அணுகலாம்.இத்தகவலை, மாநகர், மையக்கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை