மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை (29ம் தேதி)
28-Sep-2026
போத்தனூர்: குனியமுத்தூர் கோட்டத்திற்குட்பட்ட எல்.ஐ.சி.காலனி, ஆர்.எம்.டி. பங்களா ரோடு, சாய் நகரில் செயல்பட்டு வந்த போத்தனூர் பிரிவு, (தெற்கு) உதவி இன்ஜி., அலுவலகம் தற்காலிகமாக, நிர்வாக காரணங்களுக்காக கதவு எண். 41 / 203, சபரி நகர், ஜோதி நகர் பிரதான சாலை எனும் முகவரியில் வரும், 31ம் தேதி முதல் செயல்பட உள்ளது. இதனால் மேட்டூர், போத்தனூர், நூராபாத், சாய் நகர், கிருஷ்ணா கார்டன், ஆறுபடை நகர், ஸ்ரீராம் நகர், அன்பு நகர் மற்றும் செட்டிபாளையம் ரோடு பகுதியிலுள்ள போத்தனூர் பிரிவு (தெற்கு) அலுவலகத்தை சார்ந்த மின் நுகர்வோர் புதிய முகவரியிலுள்ள அலுவலகத்தை தங்கள் தேவைகளுக்கு அணுகுமாறு, குனியமுத்தூர் கோட்ட செயற்பொறியாளர் சம்பத்குமார் அறிவித்துள்ளார்.
28-Sep-2026