உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானைகள் முகாம்: பணிகள் துவங்கின

யானைகள் முகாம்: பணிகள் துவங்கின

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் யானைகள் புத்துணர்வு முகாம்கள் நடந்தன. கடந்த தி.மு.க., ஆட்சியில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறவில்லை. இந்நிலையில் த.வெ.க., அரசு ஆட்சி அமைத்த பின், யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்தனர். தமிழக அரசு பரிசீலனை செய்து, மேட்டுப்பாளையத்தில் யானைகள் புத்துணர்வு முகாமை நடத்த அனுமதி வழங்கியது. வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே யானைகள் முகாம் நடைபெற உள்ளது. இதற்காக ஏழு ஏக்கர் நிலத்தில் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை