வாழையை ருசிக்க வந்த யானைகள்
வால்பாறை; வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. கருமலை எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட ஐந்து யானைகள், நேற்று காலை தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் பயிரிடப்பட்ட வாழை மரங்களை உணவாக உட்கொண்டன.அதன்பின், கருமலை எஸ்டேட் சாலையோரம் நிறுத்தப்பட்ட சவுந்தர் என்பவரின் காரை சேதப்படுத்தியதோடு, அங்குள்ள கிளப் ஒன்றையும் சேதப்படுத்தியது. அதிகாலை நேரத்தில் எஸ்டேட் பகுதியில் யானைகள் முகாமிட்டதால், தொழிலாளர்கள் விரட்ட முடியாமல் தவித்தனர். ஒரு மணி நேரத்திற்கு பின், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.