உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தாயுமானவர் திட்டத்தில் குளறுபடிகள்; தீர்வு காண ஊழியர்கள் வேண்டுகோள்

 தாயுமானவர் திட்டத்தில் குளறுபடிகள்; தீர்வு காண ஊழியர்கள் வேண்டுகோள்

- நமது நிருபர் -: வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கும் 'தாயுமானவர்' திட்டத்தில் உள்ள, பிரச்னைகளுக்கு தீர்வு காண கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தலைவர் ராஜேந்திரன், செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர், உணவு பொருள் வழங்கல் துறை இயக்குனர் சிவராசுவிடம் அளித்த மனு: 'தாயுமானவர்' திட்ட பயனாளிகள் வயது முதிர்ந்தும், நோய் வாய்ப்பட்டும் உள்ளனர். இதனால், அவர்களது கைவிரல் மற்றும் கண்விழி ரேகை பெறுவதில் பெரும் சிரமம் உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். 'தாயுமானவர்' திட்டப்பணியின் போது புளூடூத் நடைமுறை ரத்து செய்ய வேண்டும்.ரேகை விழாத பட்சத்தில் அவர் குடும்பத்தைச்சேர்ந்த ஒருவரை 'நாமினி'யாக நியமித்து பொருள் வழங்க அனுமதிக்க வேண்டும். இத்திட்டத்தில், பொருட்கள் வழங்கும்போது, விற்பனையாளர்களுக்கு ஒரு உதவியாளர் கட்டாயம் ஏற்பாடு செய்ய வேண்டும். சர்வர் முறையாக இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். வினியோகத்தின் போது 'பிராக்ஸி' முறை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். திட்டத்துக்கு ஒரு நிலையான தேதி அறிவிக்கவும், இயற்கை சீற்றங்களின் போது, உரிய மண்டல இணை பதிவாளர்கள் முடிவின்படி வினியோகம் செய்யும் வகையிலும் உத்தரவிட வேண்டும். திட்டப் பணியின் போது, ஊழியருக்கு, தினமும், ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ