போட்டிகளில் பங்கேற்க ஊக்கம் தர வேண்டும்
இ ந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், 'மேக் இன் இந்-தியா, ஸ்கில் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா' போன்ற திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தொழில்முனைவோர் பயிற்சி
ட்ரோன் தயாரிப்பு, வாகனங்கள் கண்டுபிடிப்பு, சாப்ட்வேர் மற்றும் ஆட்டோமே-ஷன், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு போன்றவற்றில், தேசிய, சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க தங்களது மாணவர்களை ஒவ்வொரு கல்வி நிறு-வனமும் ஊக்கப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதோடு மட்டு-மல்லாமல், புதிய கண்டுபிடிப்புகள் வழியே, மாணவர்களை தொழில் முனைவோரா-கவும் உருவாக்க வேண்டும்.அதன்படி, எங்கள் மாணவர்களுக்கு இன்டெர்ன்ஷிப் பயிற்சிகள் வழங்கவும், மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான சாத்தியங்களை ஏற்ப-டுத்தவும், தொழிற்துறையினருடன் இணைந்து செயல்படுவது அவசியம். கல்லுாரி வளாகத்தில், மேம்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை ஏற்படுத்துவதும், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதும் முக்கியம்.பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று, கண்டுபிடிப்பாளர்களாகவும், தொழில் முனைவோராகவும் உருவாவதற்கு கல்வி நிறுவனங்களின் துணை அவசி-யம்.தொழில்நுட்ப கற்பித்தல், திறன் வளர்ப்பு திட்டங்கள் ஆகியவற்றின் மீது மாணவர்-களுக்கு சிறந்த நம்பிக்கை ஏற்படும் வகையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். இங்கு படித்தால், தொழில்நுட்பத்தை சிறப்பாக கற்று கொள்வதுடன், நிச்-சயமாக நல்ல சம்பளத்துடன் பெரிய நிறுவனங்களில் வேலைக்கு சேரலாம் என்ற எண்ணத்தையும் மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். படித்து முடித்ததும், முத-லில் வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்வதோடு, படிப்படியாக தொழில் முனை-வோராக மாற வேண்டும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.