மார்க்கெட் ரோட்டில் ஆக்கிரமிப்பு; பாதசாரிகள் பாதிப்பு
ரோட்டோர கடைகளை அகற்றுங்க! பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து, திரு.வி.க., மார்க்கெட் வரை ரோட்டோர கடைகள் அதிகம் இருப்பதால், மக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. இத்துடன் இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே 'பார்க்கிங்' செய்யப்பட்டு இருப்பதால், வாகனங்கள் ரோட்டில் செல்லவும், மக்கள் நடந்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் வாகனம் பார்க்கிங் செய்வதை கட்டுப்படுத்தவும், ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- பெருமாள், பொள்ளாச்சி.கிணற்றில் குப்பை உடுமலை வனத்துறை அலுவலகம் அருகே உள்ள, நகராட்சி கிணறு பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. இதனால், பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த கிணற்றை நகராட்சியினர் சீரமைக்க வேண்டும். - கார்த்தி, உடுமலை.சேதமடைந்த குப்பை தொட்டி வடசித்துார் -- நெகமம் செல்லும் ரோட்டோரம், குப்பை கொட்ட பயன்படுத்தும் தொட்டி சேதமடைந்து உபயோகிக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால், ரோட்டோரத்தில் குப்பையை வீசி செல்லும் நிலை உள்ளது. எனவே, ஒன்றிய நிர்வாகத்தினர் இதை கவனித்து புதிதாக குப்பைத்தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -- ஆறுமுகம், நெகமம்.சாய்ந்த மின்கம்பம் கிணத்துக்கடவு - கொண்டம்பட்டி செல்லும் ரோட்டோரம் உள்ள, மின்கம்பத்தின் மேல்பகுதி சாய்ந்த நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் இருப்பதால், மின்வாரிய அதிகாரிகள் இதை கவனித்து உடனடியாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -- கணேஷ், கிணத்துக்கடவு.ரோடு சேதம் கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் சிறிதாக இருந்த குழி சீரமைக்கப்படாததால் தற்போது பெரிதாகி வருகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் பலர் தடுமாறுகின்றனர். இதை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கவனித்து உடனடியாக சீரமைப்பு பணியில் ஈடுபட வேண்டும். - கந்தவேல், கிணத்துக்கடவு.சுகாதார சீர்கேடு உடுமலையிலிருந்து கொழுமம் செல்லும் வழியில், ரோட்டோரத்தில் குப்பைக்கழிவுகள் அதிகம் கொட்டப்படுகின்றன. குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள கால்நடைகளும் அக்கழிவுகளை தொடர்ந்து உட்கொள்கிறது. இதனால் கால்நடைகளும் பாதிக்கப்படுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. - ராதிகா, உடுமலை.நாய்கள் தொல்லை உடுமலை, ராமசாமி நகர், புதிய வாட்டர் டேங்க் அருகில் உள்ள தெருவில் இரவில் நாய்கள் அதிக அளவில் நடமாடுகின்றன. இரவில் ஊளை இடுகிறது. யாரும் தூங்க முடியவில்லை. எனவே பெண்கள், வயதானவர்கள், மற்றும் சிறு குழந்தைகள் நடப்பதற்கு அச்சமாக உள்ளது. கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். - மோகன், உடுமலை.வாகனங்கள் ஆக்கிரமிப்பு உடுமலை, பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சரக்கு வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். இதனால் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாமல் போகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்வதற்கும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மாலை நேரங்களில் ரோட்டின் பாதி வரை நிற்கும் வாகனங்களால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. - தருண்குமார், உடுமலை.ரோட்டை சீரமையுங்க கணக்கம்பாளையம் அங்கன்வாடிக்கு செல்லும் ரோடு மோசமாக உள்ளது. மழைநாட்களில் மழைநீர் தேங்கும் வகையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அழைத்து செல்வதற்கு பெற்றோர் சிரமப்படுகின்றனர். ரோட்டையும், வளாகத்தையும் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராஜன், மலையாண்டிகவுண்டனுார்.போக்குவரத்து பாதிப்பு உடுமலை, சீனிவாசா வீதியில் வாகனங்கள் விதிமுறைகளை மீறி நிறுத்தப்படுகின்றன. வணிக கடைகளுக்கு வருவோர் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் வீடுகளுக்கு செல்வதற்கே முடியாமல் திணறுகின்றனர். போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் கண்காணித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதை முறைப்படுத்த வேண்டும். - வாசன், உடுமலை.குழி மூடப்படுமா வால்பாறை நகரில், வாழைத்தோட்டம் செல்லும் ரோட்டோரத்தில் இருக்கும் குழி மூடப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் இவ்வழியாக நடந்து செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே காலம் தாழ்த்தாமல், நகராட்சி அதிகாரிகள் இதை கவனித்து விரைவில் சீரமைக்க வேண்டும். - - வில்சன், வால்பாறை.