உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

கோவை தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

கோவை; கோவை மாவட்டம் சூலுார், செலக்கரிச்சலை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 50. ஜவுளி, கோழிப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை மேற்கொள்கிறார். இவரது மகன் வெங்கடேஷ், தி.மு.க., மாணவரணி ஒன்றிய செயலாளர். ராமச்சந்திரன் வீட்டுக்கு நேற்று காலை மூன்று கார்களில் வந்த, 15 அமலாக்கத்துறை அதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டனர். மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 30 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சில மாதங்களுக்கு முன், வங்கிகளில் பெற்ற கடனை ஒரே நேரத்தில் ராமச்சந்திரன் செலுத்தியதாகவும், அந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்தே, அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மாலையிலும் சோதனை தொடர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ