உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உரிமம், பதிவுடன் உணவு பொருட்கள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தணும்

உரிமம், பதிவுடன் உணவு பொருட்கள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தணும்

பொள்ளாச்சி; ரோட்டோர தள்ளுவண்டி கடைகளில், உரிமம் மற்றும் பதிவுடன் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி நகருக்குள், ரோட்டோர தள்ளுவண்டிக்கடைகள், சிறு ஓட்டல்கள் என, உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மக்களும், தங்கள் வசதிக்கு ஏற்ப, ஏதாவது ஓரிடத்தைத் தேர்வு செய்து, உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிடுகின்றனர்.இதற்காக, இட்லி மாவு, ரெடிமேட் சப்பாத்தி, புரோட்டா என்ற பெயரில் பாக்கெட் உணவுப் பொருட்கள் பெருமளவு தருவிக்கப்படுகின்றன.ஆனால், தள்ளுவண்டிக் கடைகளில் தயாரித்து விற்கப்படும் உணவுப் பொருட்கள், கலப்படம் மற்றும் சுகாதாரமின்றி உள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர். அதேநேரம், உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் பதிவு பெற்று, உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:உணவு தரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி, உணவு பொருட்கள் விற்பனை செய்வோர் 'லைசென்ஸ்' பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய்க்கு மேல் உணவு பொருட்கள் விற்பனை செய்வோர், உரிமம் பெற வேண்டுமென்றும், அதற்கு குறைவாக விற்பனை செய்பவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, உணவு பாதுகாப்பு துறையினர் தரமற்ற, உடலுக்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகள், சுவையூட்டும் பொருட்கள் பயன்பாடு தொடர்பாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிமம், பதிவு செய்திருப்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை