உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.பி.ஜி., நர்சிங் கல்லுாரியின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

பி.பி.ஜி., நர்சிங் கல்லுாரியின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பி.பி.ஜி., நர்சிங் கல்லுாரி சார்பில், 'பிளாஸ்டிக் மாசுபாட்டிலிருந்து விடுபடுவோம்' என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் இருந்து துவங்கிய பேரணி, பாலசுந்தரம் சாலையின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அஸ்வின் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அஸ்வின், பேரணியை துவக்கி வைத்தார். இதில், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி, பொதுமக்களிடம் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், மாணவர்கள் எடுத்துரைத்தனர். பி.பி.ஜி., நர்சிங் கல்லுாரியின் முதல்வர் டாக்டர் லிங்கராஜ் சித்ரா பேசுகையில், '' மனிதர்களின் நலனுக்கு, ஒரு சுத்தமான சுற்றுச்சூழல் தேவை. மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பொறுப்பினை கற்றுத்தருவதன் மூலம், சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான முன்னோடிகளை உருவாக்குகிறோம், '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி