உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண் மீது அவதுாறு; முன்னாள் காதலனுக்கு சிறை

பெண் மீது அவதுாறு; முன்னாள் காதலனுக்கு சிறை

கோவை; சரவணம்பட்டி, சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் சங்கர், 37; அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் இவருக்கும், சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது குறித்து, பெண்ணின் கணவருக்கு தெரியவந்ததையடுத்து, சங்கருடன் பேசுவதை அப்பெண் தவிர்த்து விட்டார். ஆத்திரமடைந்த சங்கர், கடந்த 9ம் தேதி அப்பெண்ணின் வீட்டுக்கு சென்றார். பெண்ணின் கணவரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கினார். சத்தம் கேட்டு அப்பெண் வெளியில் வந்து கேட்டபோது, சாலையில் வைத்து அவரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். அப்பெண் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை