செயல் அலுவலர் பொறுப்பேற்பு
மேட்டுப்பாளையம்; சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலராக மாலா பொறுப்பேற்றார்.சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்தவர் ரவிசங்கர். இவர் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் பேரூராட்சிக்கு, செயல் அலுவலராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.பூலுவபட்டி பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்த மாலா, சிறுமுகை பேரூராட்சிக்கு மாற்றப்பட்டார். செயல் அலுவலராக பொறுப்பேற்ற அவருக்கு, அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.