உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களுக்கு விவசாயம் குறித்து விளக்கம்

மாணவர்களுக்கு விவசாயம் குறித்து விளக்கம்

மேட்டுப்பாளையம்; சிறுமுகை அடுத்த சம்பரவள்ளிபுதூரில், தனியார் தோட்டம் உள்ளது. இங்கு கோவை காருண்யா பல்கலை வேளாண்துறை மாணவ, மாணவியர், ஆய்வு செய்ய வந்தனர். அப்போது மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமியர், தோட்டத்திற்கு வந்தனர். பயிர்களின் முக்கியத்துவம், விவசாயம் செய்வதன் நோக்கம், அதன் வளர்ச்சி, குறித்து, வேளாண் கல்லூரி மாணவர்கள் பள்ளி சிறுவர்களுக்கு விளக்கிக் கூறினர்.பின்பு கல்லூரி மாணவர்கள், இயற்கை விவசாயத்தில், என்னென்ன தொழில்நுட்பங்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து, விவசாயி விஸ்வநாதனிடம் கேட்டு அறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !